உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

முக்கிய சாட்சியாளர்களின் மர்ம மரணங்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. கடும் சந்தேகம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
22 பார்வைகள்

அரச திறைசேரி நிதி மோசடி மற்றும் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் வழக்குகளுடன் தொடர்புடைய முக்கிய சாட்சியாளர்களின் மர்ம மரணங்கள் குறித்து அரசு உடனடி மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

எதுல்கோட்டேயில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா இதனைத் தெரிவித்தார்.

முக்கிய ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய நபர்கள் அடுத்தடுத்து உயிரிழக்கின்றமை தற்செயலானவையா? அல்லது திட்டமிட்ட படுகொலைகளா? என்ற கேள்வி எழுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“திறைசேரி நிதி மோசடி குறித்து முறைப்பாடுகளை முன்வைத்த இந்த அதிகாரியின் மரணம் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தற்கொலையா? அல்லது மோசடிகளை மூடிமறைக்க நடந்த கொலையா? என்பது குறித்து கண்டறியப்பட வேண்டும்.

சர்ச்சைக்குரிய ஏயார்பஸ் வழக்கில் பிரதான சாட்சியாளராக இருந்த கபில சந்திரசேனவின் மரணம் மர்மமாக உள்ளது. நீதிமன்றத்தில் உண்மைகள் வெளிவருவதைத் தடுக்க ஏதேனும் தரப்பினர் இதில் பின்னணியில் உள்ளனரா? என விசாரணை நடத்தப்பட வேண்டும்.

நீதிமன்றத் தீர்ப்புகள் வழங்கப்படும் திகதிகளை ஜனாதிபதி பகிரங்கமாக அறிவிப்பதானது, நீதித்துறையின் சுதந்திரத்தில் அரசியல் செல்வாக்குச் செலுத்தப்படுகின்றதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றது.” – என்றும் அவர் சாடினார்.

“இவ்வாறான சூழல் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நியாயமான நீதி கிடைக்காது என்ற பயத்தை ஏற்படுத்தி, அவர்களைத் தற்கொலைக்குத் தூண்டலாம் அல்லது மர்மமான முறையில் கொலை செய்ய வழிவகுக்கலாம்” என்றும் அவர் எச்சரித்தார்.

தற்போதைய அரசில் உள்ள அமைச்சர்களில் பலர் 2005 ஆம் ஆண்டு ராஜபக்ஷவினரை ஆட்சிக்குக் கொண்டு வரப் பாடுபட்டவர்கள் என்பதை நினைவூட்டிய அவர், இந்த மோசடிகளுக்கும் அரசில் இருப்பவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக நிலவுகின்றது என்றும் குறிப்பிட்டார்.

ஊழலுக்கு எதிராகத் தண்டனை வழங்குவதில் அரசுக்கு உண்மையான நோக்கம் இருக்குமானால், சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சுஜித் சஞ்சய பெரேரா இதன்போது வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

66 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

64 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

62 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0