உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஜூனில் மீண்டும் ரணில்; அரசியல் களம் அதிரும்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
29 பார்வைகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் ஜூன் மாதம் மீண்டும் தீவிர அரசியலுக்குக் கொண்டு வரவுள்ளதாகவும், அதன் பின்னர் நாட்டின் அரசியல் களத்தில் பாரிய திருப்பங்கள் ஏற்படும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் தற்போது மிகச்சிறந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட ஹரின் பெர்னாண்டோ, மேலும் தெரிவித்ததாவது:-

“உலகளவில் வலதுசாரிக் கொள்கை அல்லது மத்தியஸ்தப் பாதையில் நாட்டை வழிநடத்த ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகிய இருவருமே இலங்கையிலுள்ள மிகச் சிறந்த தலைவர்கள்.

இவர்களுடன் ஹர்ஷ டி சில்வா போன்ற பொருளாதாரத் திறமையாளர்கள் எங்களிடம் உள்ளனர்.

ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு நாடு பாரிய நெருக்கடிகளைச் சந்திக்கும் என நாம் டிசம்பரில் கூறியபோது மக்கள் சிரித்தார்கள். தற்போது டொலர் மதிப்பு 325 ரூபாயில் செயற்கையாகத் தக்கவைக்கப்பட்டுள்ளது.

அரசு டொலர் விவகாரத்தில் ஒரு நெருப்பை மறைத்து வைத்துள்ளது. இது வெடிக்கும்போது டொலரின் மதிப்பு 350 ரூபாயைத் தாண்டும்.” – என்று அவர் எச்சரித்தார்.

உலகப் போரினால் தான் விலை உயர்வு எனச் சொல்லப்படுவதை மறுத்த அவர், இந்தியா அல்லது பங்களாதேஷில் இல்லாத விலை உயர்வு இலங்கையில் மட்டும் ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

எரிபொருள் வரிசையில் நின்றுகொண்டு அரசுக்கு ஆதரவாகப் பேசும் சிலரின் அறியாமையால்தான் நாடு இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் சாடினார்.

“தொடர்ந்து இரண்டு முறை தவறு செய்துவிட்டோம் என்பதை மக்கள் இப்போது உணர்கின்றார்கள். அடிப்படைத் தேவைகளுக்கே திண்டாடும் காலம் வரும்போது, இன்று அரசுக்கு ஆதரவாகப் பேசும் வீண் பேச்சுக்களுக்குப் பதில் கிடைத்துவிடும். நாம் தற்போது அமைதியாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றோம்” என்றும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

நாட்டை உலகுக்கு அடையாளம் காட்டிய வலதுசாரிக் கொள்கைக்கு மக்கள் மீண்டும் ஆதரவளிப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

64 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

63 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

61 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0