உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கரவெட்டி மக்கள் எதிர்நோக்கும் நீர் வடிந்தோடல் சிக்கல்; விரைவில் தீர்வு காண நடவடிக்கை..!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
23 பார்வைகள்

கரவெட்டி மத்திய பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் வடிகால் அமைப்பு மற்றும் வீதிப் புனரமைப்புப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படவுள்ளதாகத் NPP யின் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினரால்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேச மக்களின் முறைப்பாட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட நேரடிப் கள ஆய்வின் அடிப்படையில் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் அஜந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதன் முழு விபரமும் வருமாறு. சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், குறிப்பிட்ட பகுதிக்குச் சென்று நிலைமைகள் ஆராயப்பட்டன.

இதன்போது,  நீரோட்டப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள குழாய்கள் (Pipes) முறையற்ற விதத்தில் அமைந்துள்ளமை கண்டறியப்பட்டது. தேங்கி நிற்கும் நீர் சீராக வெளியேறுவதற்கு ஏதுவாக, சுமார் 50 அடி உயரத்தில் உள்ள குழாய்களைச் சீரமைத்து, நிலமட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டியதன் அவசியம் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

மேலும், கரவெட்டி மத்தி கன்சான் பாதி வீதி  மற்றும் சந்திரகலை வீதி ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளில் தொழில்நுட்பக் குறைபாடுகள் உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக  சந்திரகலை வீதியில் சுமார் 120 – 150 மீட்டர் இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ள வடிகால்  (Drainage) முறையற்றதாக உள்ளது.

நீர் வெளியேற வேண்டிய திசைக்கு மாறாக, எதிர் திசையில் நீர் வடிந்தோடும் நிலை காணப்படுகிறது. இது பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் கவனக்குறைவினால் ஏற்பட்ட தவறு எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மழைக்காலம் ஆரம்பமாவதற்கு முன்னதாக இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இது விடயமாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் அவர்களுடன் கலந்துரையாடப்பட்டு, முதற்கட்ட ஆயத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் கரவெட்டி  பிரதேச சபை தவிசாளருடனும்  இவ்விடயம் குறித்துப் பேசப்பட்டுள்ளது.  எதிர்காலத்தில் இவ்வாறான தொழில்நுட்பத் தவறுகள் ஏற்படாத வண்ணம் பணிகளை முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

மேலும்  முறையான நிதிப் பயன்பாட்டின் ஊடாக, மக்களின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்து இப்பணிகளை விரைந்து முடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மக்களின் ஒத்துழைப்புடன், எதிர்வரும் பருவமழைக்கு முன்னதாகவே வடிகால் அமைப்புகளைச் சீரமைத்து, முறையான நீர் வழிந்தோடல் திட்டத்தை அமுல்படுத்த முழுமையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர்  அஜந்தன் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

64 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

61 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

59 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0