உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வவுனியாவில் தவிசாளரின் சொகுசு வாகனத்திற்காக 5 மாதத்தில் 17 இலட்சம் காலி!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
24 பார்வைகள்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி மிக அதிக விலைக்கு வாடகை வாகனம் ஒன்றை ஒப்பந்த அடிப்படையில் பெற்றுள்ளமை மக்களிடையே கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் ஏற்கனவே அதிகாரிகளினதும் தவிசாளரினதும் பயன்பாட்டிற்காக ஒரு ‘சிங்கிள் கப்’ (Single Cab) ரக வாகனமும் , ஒரு முச்சக்கர வண்டியும் பயன்பாட்டில் உள்ளன. இதற்கு முன்னர் பதவியில் இருந்த தவிசாளர்கள் இந்த வாகனங்களையே பயன்படுத்தி வந்தனர். இது தவிர மேலதிக தேவைக்காக அரசாங்க அதிபரினால் மற்றுமொரு ‘பிக்கப்’ (Double Cub Pickup) ரக வாகனமும் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் தற்போது பதவியிலுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் தவிசாளர் புதிய வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தியுள்ளார். இந்த வாகனத்தின் ஒப்பந்தத்தின் வாகனத்தின் மாதாந்த வாடகை 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபா (3000 கிலோமீட்டர் வரை) மற்றும் மேலதிக கட்டணமாக நிர்ணயிக்கப்பட்ட தூரத்தைத் தாண்டினால் ஒரு கிலோமீட்டருக்கு 150 ரூபாய் எனவும் ஒப்பந்த காலம் ஓராண்டு காலப்பகுதி (2025.11.13 முதல் 2026.11.12 வரை) செய்யப்பட்டுள்ளமையுடன் வாகன வகை டொயோட்டா பிக்கப்(Toyota Double Cup Pickup) ஆகும்

கடந்த ஜந்து மாதங்களில் மாத்திரம் வாடகைக்கு அமர்த்திய டொயோட்டா பிக்கப்(Toyota Double Cup Pickup) வாகனத்திற்காக 17லட்சத்தி 24750 ரூபா கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சபை தெரிவித்துள்ளது.

சபையிடம் போதிய வாகன வசதிகள் இருந்தும் மக்களின் வரிப்பணத்தை வீண் விரயம் செய்யும் வகையில் இவ்வளவு அதிக தொகைக்கு வாகனம் எதற்கு? என்ற கேள்வி எழுந்துள்ளது. எங்களுடைய அடிப்படைத் தேவைகளான வீதிகள் , வடிகால்கள் மற்றும் மின்விளக்குகளைச் சீரமைக்க நிதியில்லை என்று கூறும் சபை வாகனத்திற்கு மட்டும் எங்கே இருந்து இவ்வளவு பணத்தைக் கொண்டு வருகின்றது?’ என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் இந்த வாகன கொள்வனவு அல்லது வாடகை ஒப்பந்தம் தொடர்பான எந்தவொரு விளம்பரமும் அல்லது கோரிக்கையும் பத்திரிகைகளில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சபையிடம் ‘சிங்கிள் கப்’ வாகனம், அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்ட ‘பிக்கப்’ வாகனம் மற்றும் முச்சக்கர வண்டி எனப் பயன்பாட்டிற்கு வாகனங்கள் வரிசையாக இருக்கும்போது எதற்காக மீண்டும் ஒரு டொயோட்டா பிக்கப் வாகனத்தை மக்கள் பணத்தில் வாடகைக்கு அமர்த்த வேண்டும்? முன்னாள் தவிசாளர்கள் செய்யாத விடயத்தில் தற்போதைய தவிசாளருக்கு ஏன் இவ்வளவு விலையுயர்ந்த வாகனம் தேவைப்படுகிறது?

நிர்வாக ரீதியான தேவைகளை விட மக்கள் பணத்தில் இத்தகைய செலவுகள் செய்யப்படுவது வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

64 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

61 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

59 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0