உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் வடபுல மாணவர்களை இணைக்கும் Study In யாழ்ப்பாண கல்வி நிறுவனம் திறப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
33 பார்வைகள்

வடபகுதி மாணவர்களின் சர்வதேச உயர்கல்விக் கனவை நனவாக்கும் நோக்குடன், சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் அவர்களை நேரடியாக இணைக்கும் Study In யாழ்ப்பாணம் கல்வி நிறுவனத்தின் பிரமாண்ட திறப்பு விழா இன்று (08) யாழ்ப்பாணம் வேம்படிச் சந்தியில் அமைந்துள்ள அதன் தலைமையகத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

விழாவிற்கு வருகை தந்த அதிதிகள் மங்கள வாத்தியங்கள் முழங்க, மாலை அணிவித்து கௌரவத்துடன் மேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.

வடமாகாண ஆளுநர் கௌரவ நா. வேதநாயகன் மற்றும் யாழ். மாவட்ட அரச அதிபர் ம. பிரதீபன் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டு, நாடா வெட்டி நிறுவனத்தின் செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

“கற்க மறுப்பவர் வாழ மறுப்பவர்” எனும் பழந் தமிழ் முதுமொழிக்கு ஏற்ப, வடக்கு மக்களின் கல்வித் தேடலுக்குப் புதிய உத்வேகம் அளிக்கும் வகையில் இந்த நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. வடபகுதியில் திறமை மிக்க மாணவர்கள் இருந்தும், அரச பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கான வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு, சர்வதேசத் தரம் வாய்ந்த உயர்கல்வியைத் தொடர இதுவொரு சிறந்த நுழைவாயிலாக அமையும் என நிறுவனத்தின் பணிப்பாளர் சபை இதன்போது நம்பிக்கை வெளியிட்டது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் பின்வரும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கலாநிதி ஆறு திருமுருகன் (ஸ்தாபகர், சிவபூமி அறக்கட்டளை), ஜெறோம் செல்வநாயகம் (யாழ். மறைமாவட்டம்), மதிவதனி விவேகானந்தராஜா (யாழ். மாநகர முதல்வர்), சந்திரமௌலி லலீசன் (அதிபர், கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை), ரிஷ்வான், ரிஸ்மி (பணிப்பாளர்கள், “Study In யாழ்ப்பாணம்”), ஐயாத்துரை கஜமுகன் (செயற்பாட்டுத் தலைவர்) என்போர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய விருந்தினர்கள், வடபகுதி மாணவர்களின் கல்வித் தரத்தைச் சர்வதேச மட்டத்திற்கு உயர்த்துவதிலும், உலகளாவிய வாய்ப்புகளை அவர்களுக்கு அண்மிக்கச் செய்வதிலும் இக்கல்வி நிறுவனம் ஒரு முக்கிய மைல்கல்லாகத் திகழும் எனத் தெரிவித்தனர்.

இந்தத் திறப்பு விழாவானது யாழ். கல்விச் சூழலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்து வைத்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

63 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

61 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

59 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0