உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பருத்தித்துறை மீன் சந்தை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
33 பார்வைகள்

பருத்தித்துறை மீன் சந்தை வியாபாரிகள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் மற்றும் சந்தை நிர்வாகம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) காலை 10:30 மணியளவில் பருத்தித்துறை நகர சபையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பருத்தித்துறை நகர சபையின் தவிசாளர், செயலாளர் மற்றும் நகர சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மீன் சந்தை வியாபாரிகள் சார்பில் பெரும் எண்ணிக்கையிலானோர் பங்கேற்று தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

கலந்துரையாடலின் போது, வியாபாரிகள் தாம் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் வியாபாரிகளுக்கு மீனை பாதுகாப்பான முறையில் வைப்பதற்கான கூலரின் தேவை தொடர்பாக அதிகாரிகள் முன்னிலையில் விவரித்தனர்.

சந்தையின் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான குறைபாடுகள், தினசரி வியாபாரத்தின் போது எதிர்கொள்ளும் நிர்வாக ரீதியான நெருக்கடிகள், சுகாதார மற்றும் கழிவு முகாமைத்துவத்தில் உள்ள சவால்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

வியாபாரிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்த தவிசாளர் மற்றும் செயலாளர், அவற்றுக்கான உடனடி மற்றும் நீண்டகால தீர்வுகள் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.

“வியாபாரிகளின் நியாயமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு சந்தை நடவடிக்கைகளை முறைப்படுத்தவும், பிரச்சினைகளைத் தீர்க்கவும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என நகர சபை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சந்தை நடவடிக்கைகளை எவ்வாறு செம்மையாகக் கட்டுப்படுத்துவது மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான சிக்கல்கள் எழாமல் தவிர்ப்பது குறித்த முக்கிய தீர்மானங்கள் கூட்டத்தின் இறுதியில் எடுக்கப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

63 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

61 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

59 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0