உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

விஜய்க்கு எமது நாட்டுத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவிப்பது வெட்கக்கேடு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
19 பார்வைகள்

இந்தியாவின் மாநில அரசியல்வாதிகளுக்கு நாட்டின் தலைவர்கள் என்ற அந்தஸ்தை வழங்கி, எமது நாட்டுத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவிப்பது வெட்கக்கேடான செயல் என்று ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் கடுமையாகச் சாடியுள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள அக்கட்சியின் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எமது நாட்டின் சில அரசியல் தலைவர்கள் சுயகௌரவத்தை மறந்து செயற்படுகின்றார்கள். ஒரு நாட்டின் தலைவர், மற்றொரு நாட்டின் தலைவருக்கே உத்தியோகபூர்வ வாழ்த்துகளைத் தெரிவிக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் ஒரு கட்சியின் தலைவராக இருக்கும் நடிகர் விஜய்க்கு, எமது நாட்டுத் தலைவர்கள் ‘எக்ஸ்’ தளம் ஊடாகப் போட்டி போட்டுக்கொண்டு வாழ்த்துத் தெரிவிக்கின்றனர். இது அவர்களின் மதியீனத்தையே காட்டுகின்றது.” – என்று தேரர் குறிப்பிட்டார்.

இந்திய அரசியல்வாதிகள் என்றால் எமது நாட்டுத் தலைவர்களுக்கு அத்தனை இனிப்பாக இருக்கின்றது எனக் கேலி செய்த அவர், மேலும் தெரிவித்ததாவது,

“எமது நாட்டு மாகாண சபை அமைச்சர்களுக்கு இந்தியாவின் தலைவர்கள் எப்போதாவது இதுபோன்று வாழ்த்து அனுப்பியதுண்டா?

கச்சதீவு விவகாரத்தை மையப்படுத்தி, புலம்பெயர் அமைப்புகளின் விருப்பத்துக்கு ஏற்ப காய் நகர்த்தும் விஜய் போன்றவர்கள், இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட அனுமதிக்க முடியாது.

விஜய் இந்தியாவின் ஒரு மாநிலத் தலைவரே தவிர, முழு இந்தியாவுக்கும் தலைவர் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நாடாளுமன்றத்துக்குள் தெரிவிக்கும் கருத்துக்களைப் பொதுவெளியில் கூறினால், வீதியில் இறங்கி நடமாட முடியாத நிலையை மக்கள் ஏற்படுத்துவார்கள்.

இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாக்க சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தயாராக இருக்கின்றோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

63 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

61 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

59 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0