உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கபில சந்திரசேனவுக்காக கூலிக்கு பிணை நின்ற இருவர் சிக்கினார்கள்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
25 பார்வைகள்

ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேனவின் பிணையாளர்களாக முன்னிலையான இருவர், பணத்துக்காகப் பொய் சாட்சி சொன்னமை அம்பலமானதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்துக்காக ‘எயார்பஸ்’ விமானங்களைக் கொள்வனவு செய்தபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்று கபில சந்திரசேன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவருக்கு 100 மில்லியன் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகளை நீதிமன்றம் விதித்திருந்தது.

கபில சந்திரசேனவுக்கு பிணை வழங்குவதற்காக சாஞ்சி ஆராச்சிவத்தையைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் மற்றும் முகமது இர்ஷான் ஆகிய இருவரும் பிணையாளர்களாக நீதிமன்றில் முன்னிலையாகினர். எனினும், இவர்களுக்கும் கபில சந்திரசேனவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணையின் போது அவர்கள் ஒப்புக்கொண்ட அதிர்ச்சித் தகவல்கள் வருமாறு:-

  • தமக்கு கபில சந்திரசேன யார் என்றே தெரியாது.
  • தலா 15 ஆயிரம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே பிணை நின்றதாக ஒப்புதல்.
  • ‘தேவா’ மற்றும் ‘திஸ்ஸ’ என்பவர்களின் தூண்டுதலின் பேரிலேயே நீதிமன்றத்துக்கு வந்ததாக வாக்குமூலம்.

தமக்கு நிலையான வருமானமோ அல்லது தொழிலோ இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிணைச் சட்டத்தின்படி, சந்தேகநபரை நன்கு அறிந்தவர் மட்டுமே பிணையாளராக இருக்க முடியும். இந்த விதியை மீறியதுடன், கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் வாழைத்தோட்டம் பொலிஸார் இவர்களைக் கைது செய்தனர்.

நேற்றுமுன்தினம் கொழும்பு மேலதிக நீதிவான் லஹிரு சில்வா முன்னிலையில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, சந்தேகநபர்களின் பின்னணி மற்றும் கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்கள் பெறப்பட்ட விதம் குறித்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதிவான், இருவரையும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

மில்லியன் கணக்கிலான ஊழல் வழக்கில், கூலிக்கு பிணை நின்ற சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

59 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

57 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

57 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

44 0 0