உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நீர் ஏந்து பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
23 பார்வைகள்

கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மாலை வேளையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக நீர் தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.கடந்த பல மாதங்களாக மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடும் வெப்பமான வானிலை நிலவியதால் இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து கொண்டே வந்த நிலையில் தற்போது மீண்டும் மாலை வேளையில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருவதால் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் சற்று உயர்கிறது.

இம் மழை காரணமாக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் பண்ணையாளர்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்க பட்டு வருகின்றனர்.

இப் பகுதியில் உள்ள அனைத்து நீர் ஊற்றுகள் ஓடைகள் மற்றும் ஆறுகள் நீர் வீழ்ச்சிகளில் தற்போது நீர் வரத்து அதிகரித்துள்ளது இதனால் மழை பெய்யும் வேளைகளில் நீர் தேக்கங்களுக்கு நீரை வழங்கும் சாமி மலை ஓயா, மறே ஓயா, சியத்தல கங்குல ஓயா,காட்மோர் ஓயா, காசல்ரீ நீர் தேக்கத்திற்க்கு நீரை வழங்கும் பிரதான கங்கைகளான பொகவந்தலாவ ஓயா, கெசல்கமு ஓயா ,ஹட்டன் ஓயா தலவாக்கலை பகுதியில் உள்ள மேல் கொத்மலை நீர் தேக்கத்திற்க்கு நீரை வழங்கும் பிரதான கங்கைகளான மகாவலி கங்கை ஆகிய வற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக மாலை வேளையில் கன மழை பெய்யும் போது ஆற்று பகுதியில் நீராடுவதையும் அப் பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

61 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

59 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

59 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

47 0 0