உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மன்னாரில் இடம்பெற்ற காணி உரிமைச் சட்டங்கள் மற்றும் அரச காணி முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு !

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
23 பார்வைகள்

மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில்,  காணி உரிமைச் சட்டங்கள் மற்றும் அரச காணி முகாமைத்துவம் தொடர்பான   செயலமர்வு    மன்னார் நகர பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று, 7 ஆம் திகதி மன்னார் நகர பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

 இந்நிகழ்வு, குறிப்பாக இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது அதிக முக்கியத்துவம் பெறும் காணி தொடர்பான சட்டங்கள், நடை முறைகள் மற்றும் காணி நிர்வாக செயல்முறைகள் குறித்து அரச அதிகாரிகளுக்கு தெளிவூட்டும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த செயலமர்வில் கிராம சேவகர்கள், காணி நிர்வாகத்துடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் கள், காணி விடயங்களுக்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள், லீஸ் (Lease) முறை மற்றும் அனுமதிப்பத்திர அடிப்படையில் காணி வழங்கல் பணிகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் கள் உள்ளிட்ட மன்னார் நகர பிரதேச செயலகப் பிரிவில் பணியாற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வு, மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான  நிறுவனத்தின் ஒழுங்குபடுத்தல் மற்றும் ஏற்பாட்டில், மன்னார் பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது. மேலும், இச் செயலமர்விற்கான நிதி அனுசரணை, யுனப்ஸ் நிறுவனத்தின் விருத்தித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டிருந்து.

இந்த நிகழ்வின் பிரதான நோக்கம், அரச அதிகாரிகள் காணி தொடர்பான சேவைகளை மக்களுக்கு திறம்படவும் இலகுவாகவும் வழங்குவதற்கான அறிவையும் நடைமுறை அனுபவத்தையும் மேம்படுத்துவதாகும். அதேவேளை, அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய காணி சட்டங்கள், புதிய சுற்றறிக்கைகள் (Circulars), அவற்றின் வரைவுகள் மற்றும் நடைமுறைகள் குறித்த தெளிவூட்டல் இந்த செயலமர்வு வழங்கியது.

செயலமர்வின் போது அரச தனியார் காணி என்றால் என்ன?,அரச காணிகளை எவ்வாறு அடையாளம் காண்பது?அரச காணிகளுக்கான சட்டபூர்வ ஆவணங்கள் எவை?அரசு அதிகாரிகள் அரச காணிகளை வைத்திருக்க முடியுமா?காணி உரிமை ஆவணங்கள் மற்றும் காணி உறுதிப்பத்திரங்களை பெறும் நடைமுறைகள்,குத்தகை (Lease) அடிப்படையில் காணி பெறுவதற்கான தகுதிகள், காணி அற்றவர்” என்பவர் யார்?காணி உரிம வகைகள் மற்றும் உரிமை மாற்ற விதிமுறைகள்,அரச காணி வழங்கப்படும் போது பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள்,குத்தகை முறையில் காணி பெற்றுக்கொள்வது மற்றும் அதனுடன் தொடர்புடைய நிதி மற்றும் நிர்வாக செயல்முறைகள் தொடர்பாக விரிவாக விளக்கப்பட்டது:

மேலும், காணி தொடர்பான பல்வேறு சட்ட மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பாக அதிகாரிகளுக்கு விரிவான விளக்கங்களும் நடைமுறை வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன. பங்குபற்றுநர்களும் பல கேள்விகளைக் கேட்டு விளக்கங்களைப் பெற்றுக்கொண்டனர்.

 இவ்வாறான அறிவூட்டல் செயற்பாடுகள், அரச அதிகாரிகள் தங்களது பணிகளை திறமையாகவும் சட்டப் பூர்வமாகவும் முன்னெடுக்க உதவியாக அமையும் என்பதோடு மக்களுக்கு  சிறந்த சேவைகளை வழங்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இச் செயலமர் விற்கான வளவாளராக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலமாக காணி விழிப்புணர்வு செயலமர்வு துறையில் பணியாற்றிய முன்னாள் கிழக்கு மாகாண உதவி காணி ஆணையாளர் கதிர்காமத்தம்பி குருநாதன்   கலந்துகொண்டு விரிவுரைகளை வழங்கினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

50 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

38 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

40 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

56 0 0