உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நிந்தவூர் மத்தியஸ்த சபைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட 27 மத்தியஸ்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
23 பார்வைகள்

நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ எம் அப்துல் லத்தீப்   தலைமையில் நிந்தவூர் மத்தியஸ்த சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர்களுக்கான நியமன கடிதங்கள் கடந்த புதன்கிழமை 6 ஆம் திகதி  வழங்கி வைக்கப்பட்டது.

நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் கலந்து கொண்டார்.

கௌரவ அதிதியாக நிந்தவூர் பிரதேச உதவி பிரதேச செயலாளர் திருமதி ரீ.ஜெஸான், அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான மத்தியஸ்த பயிற்றுவிப்பாளர் எம் ஐ எம் ஆஸாத், நிந்தவூர் மத்தியஸ்த சபையின் புதிய தவிசாளர் ஏ.ஏ.ஹமீட், உப தவிசாளர் சட்டத்தரணி ஏ.எம் பாயீஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது 233 ம் இலக்க நிந்தவூர் மத்தியஸ்த சபைக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட 27 மத்தியஸ்தர்களுக்கான நியமனக் கடிதங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

50 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

38 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

40 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

56 0 0