உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பாடசாலை மாணவர்களின் சிகை அலங்காரம்; நாவிதன்வெளி பிரதேச சபையின் அதிரடித் தீர்மானம்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
22 பார்வைகள்

நாவிதன்வெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சிகை அலங்கார நிபுணர்களுக்கும் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் அவர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று 7 ஆம் திகதி இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் பிரதானமாக பாடசாலை மாணவர்களின் சிகை அலங்கார நடைமுறைகள் மற்றும் சேவைக் கட்டணக் கட்டுப்பாடு ஆகிய இரு விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. சினிமா பாணி அலங்காரங்களுக்கு தடை

தற்போது பாடசாலை மாணவர்கள் மத்தியில் சினிமா நடிகர்களைப் பின்பற்றி விசித்திரமான முறையில் சிகை அலங்காரம் செய்துகொள்ளும் போக்கு அதிகரித்துள்ளதாக தவிசாளர் சுட்டிக்காட்டினார். இத்தகைய சிகை அலங்காரங்கள் மாணவர்களிடையே ஒழுக்கமின்மையை ஏற்படுத்துவதுடன், ஒருவிதமான பாகுபாட்டையும், தேவையற்ற போட்டிகளையும் உருவாக்குவதாக அவர் கவலை வெளியிட்டார்.

இக்கலந்துரையாடலின் போது சிகை அலங்கார நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கையில். சில பெற்றோர்களே நேரடியாகத் தலையிட்டுத் தங்கள் பிள்ளைகளுக்கு தலையில் கோடுகள் இடுவதற்கும், வர்ணம் பூசுவதற்கும், நவீன டிசைன்களைச் செய்வதற்கும் வற்புறுத்துகின்றனர்.

ஆனால், ஏனைய சமூகங்களைச் சேர்ந்த (சிங்கள) உயர்தர மாணவர்கள் கூட பாடசாலை விதிமுறைகளை மதித்து முறையாக முடி வெட்டுவதாகவும், எமது சமூக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் இச்செயற்பாடு வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட தவிசாளர், இனிவரும் காலங்களில் பாடசாலை மாணவர்கள் எவராவது சினிமா பாணியில் அல்லது நாகரீகமற்ற முறையில் சிகை அலங்காரம் செய்ய முன்வந்தால் பின்வரும் நடைமுறையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.

அவ்வாறு சிகை அலங்காரம் செய்ய விரும்பும் பிள்ளைகளின் பெற்றோரிடமிருந்து உரிய சம்மதக் கடிதம் பெறப்பட வேண்டும்.அக் கடிதத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாணவனின் பாடசாலைக்கு அறிவிக்கப்பட்டு, உரிய பெற்றோருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இவ்விடயம் தொடர்பாக சிகையலங்கார நிபுணர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், மாணவர் சமூகத்தின் ஒழுக்கத்தை மேம்படுத்த சபை என்றும் முன்னிற்கும் எனவும் தவிசாளர் இதன்போது உறுதியளித்தார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

50 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

38 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

40 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

56 0 0