உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

‘கல்விக்கு கரம் கொடுப்போம்’ எனும் கருப்பொருளில்   உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட செயலமர்வு !

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
27 பார்வைகள்

கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் கருப்பொருளில்  மனோன் மணி அறக்கட்டளையின் ஏற்பாட்டில்  இவ்வருடம் மன்னாரில்   கணித விஞ்ஞான பிரிவுகளில்   உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட இலவச செயலமர்வு  இன்று வியாழக்கிழமை மே 07 ஆம் திகதி காலை   சம்பிரதாயபூர்வமாக மன்னார் நகர மண்டபத்தில்  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மன்னார் கல்வி வலயத்தின் மேற்பார்வையின் கீழ் மனோன் மணி அறக்கட்டளையின் ஸ்தாபகர் அகஸ்ரின் சவேரியான் அவர்களின் நிதி பங்களிப்பிலும் வழி நடத்தலின் கீழ் மன்னார் வலயக்கல்வி பணிப்பாளரின் அனுமதியுடன் மனோன்மணி அறக்கட்டளையின்  பணி குழாம் , மற்றும் மன்னார் வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள் ,   ஆசிரியர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன்  மன்னார் கல்வி வலயத்திற்கு உட்பட்ட கணித விஞ்ஞான பிரிவுகளில் கல்வி பயிலும் உயர்தர மாணவர்களுக்கான    ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் கணித விஞ்ஞான பிரிவுகளில் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை அடையும் நோக்கில் இவ்வாறான செயல் அமர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 அத்தோடு    ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் குறித்த  செயலமர்வானது இடம்பெறும் . இதற்கு மேல் அதிகமாக பல பிரதேசங்களில் அறக்கட்டளையின் நிதி அனுசரணையில்  மாலை நேர மேலதிக வகுப்புகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

50 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

38 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

40 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

56 0 0