உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 12,000 இணையவழி குற்ற முறைப்பாடுகள்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
21 பார்வைகள்

கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான இணையவழிக் குற்றங்கள் தொடர்பாக சுமார் 12,000 முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இன்று 07 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் பெறப்பட்ட சுமார் 2,300 முறைப்பாடுளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டில், பெண்களுக்கு எதிரான 4103 இணையவழிக் குற்றங்கள் பதிவாகின, அவற்றில் 753 குற்றங்கள் தீர்க்கப்பட்டன.

மேலும் 3348 முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகளும் வழக்கு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2024-ஆம் ஆண்டில் பெறப்பட்ட 3159 முறைப்பாடுகளில், 982 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

மேலும் 2177 முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகளும் வழக்கு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2025-ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான இணையவழிக் குற்றங்கள் தொடர்பாக 4,742 முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளன.

இவற்றில் 572 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் 4,170 முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகளும் வழக்கு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

2 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

49 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

50 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

38 0 0