உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மர்மமாக உயிரிழந்தவரின் உடல் பாகங்கள் பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
26 பார்வைகள்

வீட்டு மாடிப் படியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறப்படும் குடும்பஸ்தரின் சடலத்தின் சில அவயங்கள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் நல்லடக்கத்திற்காக சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை மே 4 ஆம் திகதி சம்மாந்துறை பொலிஸ் பிரிவின் விளினியடி பிரிவில் இச்சம்பவம் இடம்பெற்றதுடன் சம்பவ இடத்தில் உயிரிழந்தவரின் சடலத்தின் மீதான மரண விசாரணை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்து   சம்மாந்துறை  நீதிமன்ற நீதிவான்  நூர்டீன் முஹம்மட் சர்ஜுன்    முன்னிலையில் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன் போது   உயிரிழந்தவரின்   மரணத்தில்  சந்தேகம் இருப்பதனால் மறுநாள்   அம்பாரை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்hக   சட்ட  வைத்திய  அதிகாரி நிபுணருக்கு   சடலம் அனுப்பி  வைக்கப்பட்டது.

இதன் போது  சட்ட  வைத்திய  அதிகாரி நிபுணரினால் பிரேத பரிசோதனையை மேற்கொண்ட பின்னர் உயிரிழந்தவரின் சடலத்தின் சில அவயங்கள் கொழும்பில் உள்ள அரச பகுப்பாய்வு  திணைக்களத்திற்கு மேலதிக பரிசோதனைக்கான அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து வருவதுடன்  குடும்பஸ்தரின் சடலம் இன்று உறவினர்களிடம் நல்லடக்கத்திற்காக கையளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த சம்பவத்தில் 45 வயதுடைய மலயர் வீதி விளினியடி-1 பிரிவு சம்மாந்துறை பகுதியை சேர்ந்த உதுமாலெப்பை இப்றாகீம் என்பவர்  உயிரிழந்தவர் ஆவர் என்பதும்  குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

14 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

50 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

38 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

40 0 0