உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அதிக கட்டணம் அறவிட்ட பேருந்து நடத்துனருக்கு எதிராக நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
26 பார்வைகள்

முல்லைத்தீவு – வவுனியா மார்க்கத்தில் பயணிக்கும் தனியார் பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் அறவிடப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, குறித்த பேருந்து நடத்துனருக்கு உடனடியாகத் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறித்த மார்க்கத்தில் பயணிக்கும் சில தனியார் பேருந்துகள் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் பணத்துக்கு பற்றுச்சீட்டுகளை வழங்குவதில்லை எனவும், மீதிப் பணம் உரிய முறையில் பயணிகளுக்குத் திருப்பியளிக்கப்படுவதில்லை எனவும் அதிகார சபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக, நெடுங்கேணி – வவுனியா பயணத்துக்கான நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலான கட்டணம் அறவிடப்படுவதாக ஆதாரத்துடன் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாடு கிடைக்கப்பெற்றதையடுத்து, அதிகார சபையால் உடனடியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, சம்பந்தப்பட்ட பேருந்து நடத்துனர் விசாரிக்கப்பட்டதில் அவர் அதிக கட்டணம் அறவிட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். இதற்கு அமைவாக அவருக்கு உடனடியாகத் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் புதிதாக நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களுக்கு அமைவாகவே பணத்தைப் பெற்று அதற்கான பற்றுச்சீட்டை வழங்க வேண்டும். இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடக் கூடுதலான கட்டணம் அறவிடுபவர்களுக்கு எதிராகவும், பயணிகளுக்குப் பற்றுச்சீட்டு வழங்காதவர்களுக்கு எதிராகவும் இனிவரும் காலங்களில் மிகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகார சபைத் தலைவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை, பொதுப் போக்குவரத்தின்போது பயணிகள் சேவையில் ஈடுபடும் தரப்பினரால் முறைகேடுகள் இடம்பெற்றாலோ அல்லது அதிக கட்டணம் அறவிடப்பட்டாலோ, பொதுமக்கள் தகுந்த ஆதாரங்களுடன் (பயணச்சீட்டு, ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) அதிகார சபையின் 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கு உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் என அதிகார சபை மீண்டும் வலியுறுத்துகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

20 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

39 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

44 0 0