உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நிந்தவூர் பிரதேச சபையின் பொது மக்களுக்கான அறிவித்தல்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
23 பார்வைகள்

நிந்தவூர் பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அல்லது நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ள சகல கட்டிடங்கள், வணிக நிலையங்கள், வீடுகள், மற்றும் ஏனைய வேலைத்திட்டங்கள் தொடர்பாக, பிரதேச சபையின் முறையான அனுமதியை பெற்ற பின்னரே பணிகளை ஆரம்பிக்க வேண்டியது கட்டாயமானதாகும் என்பதை பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம் என நிந்தவூர் பிரதேச சபை அறிவித்துள்ளது.

எமது நிந்தவூர் பிரதேசத்தில் அண்மைக்காலமாக முறையான அனுமதியின்றி பல கட்டிடங்கள் மற்றும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன், அவை தொடர்பில் அயலவர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

எனவே, தற்போது கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் அனைவரும், மேலும் எதிர்காலத்தில் கட்டுமானம் அல்லது ஏதேனும் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க இருப்போரும், நிந்தவூர் பிரதேச சபையின் சட்டரீதியான அனுமதிகளைப் பெற்ற பின்னரே பணிகளை முன்னெடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக, 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 52ஆம் பிரிவு மற்றும் 1984ஆம் ஆண்டின் 44ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1978ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகார சபைச் சட்டம் ஆகிய சட்டங்களின் பிரகாரம் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

மேலதிக தகவல்கள் மற்றும் அனுமதி நடைமுறைகள் தொடர்பாக அலுவலக நாட்களில் நிந்தவூர் பிரதேச சபையை நேரடியாக அணுகுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என செய்தி குறிப்பில் நிந்தவூர் பிரதேச சபை தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

11 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

39 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

43 0 0