கூட்டுப் பாலியல் வல்லுறவு முயற்சி ; குற்றாச்சாட்டில் கைதான பாதிரி உட்பட மூவருக்கு இன்று பிணை – நீதிமன்ற காவலில் பாதிரிக்கு தாக்குதல் முயற்சி!
கூட்டுப் பாலியல் வல்லுறவு முயற்சி எனும் குற்றாச்சாட்டில் கைதான பாதிரி உட்பட மூவருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை நீதிமன்ற காவலில் பாதிரிக்கு தாக்குதல் முயற்சியும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 10ம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மல்லாவி பொலிஸ் பிரிவில் இரண்டு யுவதிகளை காரில் ஏற்றிச் சென்று கூட்டுப் பாலியல் முயற்சி செய்யப்பட்டதாக தென்னிந்திய திருச்சபையின் போதகர் மற்றம் இரண்டு பணியாளர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
குறித்த மூவரையும் 22ம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைத்திருக்குமாறு மன்று உத்தரவிட்டு பின்னர் குறித்த திகதியில் ஆயர்படுத்தப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் 29ம் திகதிவரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் குறித்த மூவரும் நீதிமன்றில் ஆயர்படுத்தப்பட்டனர். பிரதான சந்தேகநபர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணிகளான அன்டன் புனிதநாயகம், கங்காதரன், சுபாசினி ஆகியோர் ஆயரானதாக தெரிவிக்கப்படுகின்றது. 2ம் 3ம் சந்தேகநபர்கள் சார்பில் மெலும் இரண்டு சட்டத்தரணிகளும் ஆயரானதுடன், பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் பொலிசாருடன் இணைந்து மனித உரிமை செயற்பாட்டாளர்களால் ஒரு சட்டத்தரணியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய நீதிமன்ற அமர்வின்போது 2ம்3ம் சந்தேக நபர்கள் பாதிக்கப்பட்டவர்களிற்கு சார்பாக சாட்சியமளிக்க விரும்புவதாக சார்பில் ஆயரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். முதலாம் சந்தேக நபர் திட்டமிட்டு குறித்த செயலில் ஈடுபட்டமை தொடர்பிலேயே இவ்வாறு சாட்சியமளிக்க ஏனைய சந்தேக நபர்கள் நீதிமன்றிடம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த வழக்கின் பிரதான சந்தேகநபரான தென்னிந்திய திருச்சபையின் போதகர் திருநாவுக்கரசு டிக்சன் உதயச்சந்திரன் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தபோது பாதிக்கப்பட்ட யுவதிகளின் உறவினர்களால் தாக்க முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பாதிக்கப்பட்ட தரப்பிடம் பிரதான சந்தேக நபர் மற்றும் சார்ந்தவர்கள் மன்னிப்பு கோர முற்பட்டுள்ளனர். இதன்போது பாதிக்கப்பட்ட யுவதிகளின் உறவினர்கள் அவரை எச்சரித்துள்ளதுடன், சட்டத்தரணியும் நீதிமன்ற வளாகத்தில் வைத்து எச்சரித்துள்ளார்.
தென்னிந்திய திருச்சபையினால் மல்லாவி மற்றும் வன்னிவிளாங்குளம் பகுதியில் நடத்தப்பட்டுவரும் சிறுவர் அபிவிருத்தித் திட்டத்திற்கு கம்பாசன் இன்டநசனல் லங்கா எனக் கூறப்படும் மனதுருக்கம் நிறுவனம் நிதி வழங்கி வருகின்றது. குறித்த நிதியில் சிறுவர்களிற்கான பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. இதனுடைய திட்டப்பணிப்பாளராக இருந்த குறித்த போதகரே பிரதான சந்தேக நபராவதுடன், அத்திட்டத்தின் முகாமையாளர் மற்றும் தொடர்பாடல் உத்தியோகத்தராக பணியாற்றும் நபர்கள் 2ம், 3ம் சந்தேக நபர்களாக உள்ளனர்.
இதேவேளை அதே திருச்சபையினால் முன்னின்று நடத்தப்பட்டுவரும் மற்றுமொரு சிறுவர் அபிவிருத்தித் திட்டமான சோபிகா திட்டம் கிளிநொச்சி புதுமுறிப்பு பகுதியில் நடத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தில் திட்ட இயக்குநராக செயற்படும் தாவீது எனும் அந்த திருச்சபை போதகர் திட்ட பணியாளர்களுடன் இணைந்து முதலாம் சந்தேகநபரான திருநாவுக்கரசு டிக்சனை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு உதவியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
சிறுவர் அபிவிருத்தி பணிக்காக வெளிநாடுகளிலிருந்து பணம் வரவளைக்கப்பட்டு இவ்வாறான செயற்பாடுகளும், களியாட்டங்களும் நடைபெற்ற வருகின்றமை தொடர்பில் மக்கள் விமர்சனம் முன்வைக்கின்றனர். சிறுவர்கள், குழந்தைகளை காண்பித்து நிதிகளைத் திரட்டி அந்த நிதியில் களியாட்டங்கள் பலமுறை நடந்துள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், கம்பாசன் இன்டநசனல் லங்கா நிறுவனத்தின் நிதியில் பொருட்கொள்வனவுகளில் மோசடிகள் நடைபெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது. தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பேராயர் வேலுப்பிள்ளை பத்மதயாளன் அனைத்து திட்டங்களிற்கும் தலைவராக உள்ளார். அவரால் நியமிக்கப்பட்ட போதகர்கள் ஏற்கனவே பல்வேறு முறைகேடுகளுடன் தொடர்புபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டினை அத்திருச்சபையின் உறுப்பினர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.
1ம் சந்தேகநபரான டிக்சன் உதயச்சந்திரன் ஏற்கனவே மாங்குளம், விசுவமடு திட்டங்களில் பணியாற்றி நிதி மோசடியில் ஈடுபட்டதுடன் அங்கு பணியாற்றிய யுவதி ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்ட நிலையில் பொறுப்புக்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் திருச்சபையின் பேராயர் வேலுப்பிள்ளை பத்மதயாளனுக்கும், கம்பாசன் இன்டநசனல் லங்கா நிறுவனத்திற்கும் தெரியப்படுத்திய பின்னரும் கடந்த சில மாதங்களிற்கு முன்னர் மீண்டும் மல்லாவி தென்னிந்திய திருச்சபைக்கு பணியில் அமர்த்தப்பட்ட நிலையில் குறித்த பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, முதலாம் சந்தேகநபரான திருநாவுக்கரசு டிக்சனுடன் இணைந்து விசுவமடு கோட்ஸ் லவ் திட்டத்தின் பணிப்பாளர் டானியல் மொகன், சோபிகா திட்டத்தின் இயக்குனர் தாவீது ஆகியோரும் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இவர்கள் தம்மால் திரட்டப்படும் நிதியின் ஒரு பகுதியை தென்னிந்திய திருச்சபையின் பேராயரிடம் கையளித்து அதிலிருந்தே ஏனைய போதகர்களிற்கு ஊதியம் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
தென்னிந்திய திருச்சபையின் செயலாளர் சதீஸ் டேனியல் குறித்த திட்டங்களிற்கு கையெழுத்துதாரியாக இருப்பதுடன், மல்லாவி திட்டத்திற்கு டிக்சன் பொறுப்பேற்கும் முன்னர் திட்டப்பணிப்பாளராக இருந்துள்ளார். இந்த நிலையிலேயே கூட்டுப்பாலியல் முயற்சியின்போது குறித்த நபர்கள் சந்தேக நபர்களை பாதுகாப்பதற்கும், பிணை எடுப்பதற்கும் முயற்சி செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏழைக்குழந்தைகளை காண்பித்து உலக நாடுகளிலிருந்து திரட்டப்படும் நிதியை துஸ்பிரயோகம் செய்வதுடன் நிறுத்திவிடாது, பணியாளர்களாக இணைந்துகொள்ளும் ஏழைப் பெண்களை தமது பாலியல் இச்சைக்கு பயன்படுத்த முனைவதானது கேவலமான செயலாகும். இவ்வாறான திட்டங்களை மேற்கொள்ளும் முன்னர் கம்பாசன் இன்டநசனல் லங்கா நிறுவனம் பொருத்தமான இடங்களை தெரிவு செய்ய வேண்டும்.
தென்னிந்திய திருச்சபையின் பேராயராக உள்ள வேலுப்பிள்ளை பத்மதயாளன் யாழ்ப்பாணக் கல்லூரியின் 50 லட்சம் ரூபாவை கொள்ளையிட முயன்றதாக பொடசாலை நிர்வாகம் குற்றம் சாட்டுகின்றது. இந்த நிலையில் குறித்த தலைமை ஏழைக் குழந்தைகளிற்கு வரும் நிதியை சும்மா விடுவாரா என்று சிந்தித்து நிதிகளை வழங்குங்கள்