உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

குடத்தனை அரச காணி அபகரிப்பு : ஒரு மாதத்திற்குள் வெளியேறுமாறு பிரதேச செயலாளர் அதிரடி உத்தரவு!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
22 பார்வைகள்

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் அரச காணியை அபகரித்து முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கடும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஒரு மாத கால அவகாசத்திற்குள் குறித்த காணியை விட்டு வெளியேறுமாறு உத்தியோகபூர்வமாக அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.

சம்பவத்தின் பின்னணி

புலம் பெயர் தேசம் ஒன்றில் வசிக்கும் நபர் ஒருவர், குடத்தனைப் பகுதியில் உள்ள அரச காணியைத் தனது சொந்தக் காணி என உரிமை கோரி, எல்லை மதில் அமைத்து சட்டவிரோதக் கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளார். இது குறித்து அவதானித்த ஊர் மக்கள் மற்றும் பொது அமைப்புகள், அரச காணிகளைப் பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு போராட்டங்களையும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, பருத்தித்துறை பிரதேச சபையினால் குறித்த கட்டிடத்திற்கு எதிராக ‘சிவப்பு எச்சரிக்கை’ கடிதம் ஒட்டப்பட்டது. இருப்பினும், சட்டத்தை மதிக்காத போலி காணி உரிமையாளர் அந்த அறிவித்தலைக் கிழித்தெறிந்து சர்ச்சையை அதிகப்படுத்தினார். அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அவர்களும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலமைகளை ஆராய்ந்து மக்களுடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

பிரதேச செயலாளரின் அதிரடி வெளியேற்ற அறிவித்தல்

தற்போது நிலவும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் உஷா சுபலிங்கம் அவர்கள், 1979 ஆம் ஆண்டின் 7ம் இலக்க அரசு காணிகள் (ஆட்சி மீளப் பெறுதல்) சட்டத்தின் கீழ் நேரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

குறித்த காணியில் ஒட்டப்பட்டுள்ள வெளியேற்றும் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

சட்டவிரோத ஆக்கிரமிப்பு: மோகனதீஸ்வரன் நிஷா என்பவர் அரச காணியில் அதிகாரமில்லாமல் தங்கியிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

வெளியேற்றக் காலக்கெடு: 2024.05.29 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக குறித்த காணியில் இருந்து அவரும், அவரைச் சார்ந்தோரும் முழுமையாக வெளியேற வேண்டும்.

காணி ஒப்படைப்பு: குறித்த காணியை எவ்வித ஆக்கிரமிப்புமின்றி காலியான நிலையில், தகுதி வாய்ந்த அதிகாரியான பிரதேச செயலாளரிடமோ அல்லது பின்வரும் அதிகாரிகளிடமோ ஒப்படைக்க வேண்டும்:

திரு. செபமாலை தோமஸ்யூட் (கிராம சேவையாளர்), திருமதி தர்சிகா நிரோஜன் (குடியேற்ற உத்தியோகத்தர்),மக்களின் வரவேற்பு

அரசு காணிகள் தனிநபரால் அபகரிக்கப்படுவதை தடுத்து நிறுத்தும் நோக்கில் பிரதேச செயலகம் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை குடத்தனை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்றி, பொதுச் சொத்தை மீட்க அதிகாரிகள் எடுத்துள்ள இந்தத் தீர்மானம் சமூக ஆர்வலர்களால் பாராட்டப்பட்டு வருகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

37 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

55 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

61 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

22 0 0