உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கொழும்பில் நாளை விசேட போக்குவரத்துத் திட்டம்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
23 பார்வைகள்

கொழும்பில் நாளையதினம் ஏப்ரல் 28 ஆம் திகதி விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

உலக சமாதான பாத யாத்திரையின் இறுதி நிகழ்வு நாளையதினம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ள நிலையில், இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

குறித்த நிகழ்வு, சுதந்திர சதுக்க வளாகத்தில் மாலை 04 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. இதன் போது, கொழும்பு போக்குவரத்துப் பிரிவு, நிகழ்வு நடைபெறும் இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

மேலும், சூழ்நிலைகளைப் பொறுத்து நாளை காலை 11 மணி முதல் குறிப்பிட்ட சில வீதிகளில் போக்குவரத்துகளை கட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பண்டாரநாயக்க சுற்றுவட்டப் பகுதியில் இருந்து, பொரள்ளை சந்தி வரை, பேஸ்லைன் வீதி, மருதானை வீதி, நந்ததாச கொடகொட மாவத்தை, வோட் பிளேஸ், சொய்சா சுற்றுவட்டம், லிப்டன் சுற்றுவட்டம், தர்மபால மாவத்தை, எஃப். ஆர். சேனநாயக்க மாவத்தை, சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர மாவத்தை, ஹோர்டன் சுற்றுவட்டம், நந்தா மோட்டார்ஸ், சுதந்திர சதுக்க வீதி, பிரேமசிறி கேமதாச மாவத்தை, கேம்பிரிட்ஜ் பிளேஸ், கிளாஸ் ஹவுஸ், மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தை, நூலக சந்தி, மால் வீதி, பித்தளை சந்தி, ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, முத்தையா வீதி, பேபுரூக் வீதி, ஸ்டேபிள் வீதி, கங்காராம விகாரை வீதி மற்றும் சுற்றியுள்ள வீதிகளில் போக்குவரத்துகளை கட்டுப்படுத்த தீர்மானிக்கப்படவுள்ளது.

மேலும், குறித்த நேரத்தின்போது போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, வாகன சாரதிகளும் பொதுமக்களும் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு இலங்கை காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

38 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

55 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

22 0 0