உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

போதைப்பொருளுடன் தேரர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் பாரபட்சமின்றி விசாரணை.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
29 பார்வைகள்

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் பெருமளவு போதைப்பொருட்களுடன் தேரர்கள் 22 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள். பலவீனமானவர்களுக்கு ஒரு சட்டமும், பலம் படைத்தவர்களுக்கு ஒரு சட்டமும் எனப் பிரித்துப் பார்க்கும் நிலை இனி இலங்கையில் இருக்காது. இந்தச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே நீதிமன்றத்தில் உண்மைகள் அறிக்கை செய்யப்பட்டுள்ளன. மஹா சங்கத்தினரின் ஆலோசனைகளைப் பெற்று ஒருபுறம் ஒழுக்கவியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும், மறுபுறம் நாட்டின் பொதுச்சட்டத்துக்கு இணங்க எவ்வித பாகுபாடுமின்றி சட்ட நடவடிக்கைகள் தொடரும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்த நாள் முதல், சட்டவிரோத செயல்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். யாராவது சட்டத்துக்குப் புறம்பாகச் செயற்பட்டால், அவர்கள் எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும் சரி, சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது.

தற்போது நாடு முழுவதும் தேசிய மட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாகவே, கட்டுநாயக்கவில் 110 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் 22 தேரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த முழுமையான விசாரணைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைதல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் கால தாமதம் அடைவதால் ஏற்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

38 0 0
இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

55 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

62 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

22 0 0