உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
20 பார்வைகள்

பண்டாரகம பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கடந்த 21ஆம் திகதி பத்தேகொட பகுதியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 33 வயதுடைய சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் மூலம் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேக நபர் 05 வீடடைப்புத் திருட்டுகளுடனும், 02 சொத்துத் திருட்டுகளுடனும் தொடர்புடையவர் என கண்டறியப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் திருடப்பட்ட சொத்துக்களின் ஒரு பகுதி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட சொத்துக்களுள் தங்க ஆபரணங்கள், தங்க நாணயங்கள், மோட்டார் சைக்கிள் ஒன்று, தொல்பொருள் பெறுமதி வாய்ந்ததாகக் கருதப்படும் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் கைக்கடிகாரம் உள்ளிட்ட பல பொருட்கள் அடங்குகின்றன.

இதேவேளை, திருடப்பட்ட சொத்துக்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேகநபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) பண்டாரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாராவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் அடலுகம பகுதியை சேர்ந்த 50 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

52 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

56 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

17 0 0
இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

78 0 0