உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

யாழில் போதைப்பொருட்களுடன் சிக்கிய சந்தேகநபர்கள்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
20 பார்வைகள்

யாழ். மாநகரப் பகுதியில் அதிகரித்துவரும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்போது கடந்த 48 மணித்தியாலங்களில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் தலைமையக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நகரின் பல்வேறு பகுதிகளில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்ட போது 13 சந்தேகநபர்கள் பொலிஸ் வலையில் சிக்கியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வெள்ளை நிறத்திலான ஹெரோயின் பாக்கெட்டுகள், இளைஞர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யப்படவிருந்த வீரியம் மிக்க போதை மாத்திரைகள் பல கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் தற்போது யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு போதைப்பொருட்களை விநியோகிக்கும் பிரதான நபர்கள் யார்? என்பது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

விசாரணைகளின் பின்னர், சந்தேகநபர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். குடாநாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், பொலிஸாரின் இந்த தொடர் நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

52 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

56 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

17 0 0
இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

78 0 0