உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தெற்காசியாவின் சிங்கப்பூராக மாற இந்தியாவுடனான உறவு மிக அவசியம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
19 பார்வைகள்

“இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிசக்தி பாதுகாப்பின்மையிலிருந்து மீண்டு, தெற்காசியாவின் ஒரு தளவாட மையமாக உருவெடுக்க வேண்டுமாயின், இந்தியாவுடனான உறவை மிகத்தெளிவான மூலோபாயத்துடன் கையாள வேண்டும்” என்று முன்னாள் அமைச்சரும் இராஜதந்திரியுமான மிலிந்த மொரகொட தெரிவித்தார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய ஆய்வு அறிக்கையிலேயே அவர் இதனை வலியுறுத்தினார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நெதர்லாந்து ஐரோப்பாவின் மையமாகவும், சிங்கப்பூர் தென்கிழக்கு ஆசியாவின் நுழைவாயிலாகவும் வளர்ந்தமையைச் சுட்டிக்காட்டிய அவர், இலங்கை அத்தகைய வாய்ப்புகளை இதுவரை பயன்படுத்தத் தவறியுள்ளது என்றும் குறிப்பிட்டார். உள்நாட்டு அரசியல் மற்றும் வெளிநாட்டு ஈடுபாடுகள் குறித்த தேவையற்ற அச்சமே இதற்குக் காரணம் என்றும் அவர் சாடினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“இலங்கையின் வடமேற்கில் உள்ள 15 ஆயிரம் மெகாவாட் காற்றாலை மின்சக்தி ஆற்றலைப் பயன்படுத்தி, இந்தியாவுக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்வது நாட்டின் பொருளாதாரத்தை முற்றாக மாற்றியமைக்கும்.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்து, இலங்கையைப் பிராந்திய எரிசக்தி மையமாக மாற்றுவது நீண்டகால மூலோபாயத் தேவையாகும்.

கொழும்பு துறைமுக வர்த்தகத்தில் 50 சதவீத இந்தியாவுடன் தொடர்புடையது. இந்தியா தனது சொந்த துறைமுகங்களை விரிவுபடுத்துவதால், இலங்கை தனது போட்டித்தன்மையைத் தக்கவைக்க வடக்கு துறைமுக விரிவாக்கத் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும்.

இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இலங்கையை ஒரு ‘புதிய கோவா’ போன்று மாற்றியமைக்க வேண்டும்.

இந்தியா மற்றும் ஜப்பான் பங்களிப்புடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை நவீனப்படுத்த வேண்டும்.

1998 சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் 2003 திருகோணமலை எண்ணெய் தாங்கித் திட்டங்களில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் சம்பூர், மன்னார் காற்றாலைத் திட்டங்கள் இரத்துச் செய்யப்பட்டமை ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருந்தது.

இலங்கை சிறிய நாடு என்ற தயக்கத்தைக் கைவிட்டு இந்தியாவை ஒரு வாய்ப்பாகக் கருத வேண்டும். அதேநேரம், இந்தியா ஒரு பெரிய நாடு என்ற வகையில் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்தி, இலங்கையின் தேவைகளுக்கு அதிக உணர்திறனுடன் (Sensitivity) செயற்பட வேண்டும். இந்த அச்சங்களைக் கடந்தால் மட்டுமே இலங்கை தெற்காசியாவின் சிங்கப்பூராகவோ அல்லது நெதர்லாந்தாகவோ மாற முடியும்.” – என்று மிலிந்த மொரகொட மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் இருவர் சிக்கினர்!

சிகிரியாவில் நள்ளிரவில் புதையல் வேட்டை? அரசு இலச்சினை வாகனத்துடன் நீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் இருவர் சிக்கினர்! சிகிரியா பாறையை ஒட்டியுள்ள அதிமுக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில்,…

52 0 0
இலங்கை செய்திகள்

200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் ஒரே விமானத்தில் இலங்கைக்கு வருகை!

இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘லிட்டில் ஜப்பான் குரூப்’ (Little Japan Group) அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட 200…

56 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

17 0 0
இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

78 0 0