உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அநுரவுக்கு எதிராக வருகின்றது நம்பிக்கையில்லாப் பிரேரணை.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
27 பார்வைகள்

அரசின் இரு முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. நிதி அமைச்சராகப் பணியாற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர ஆகிய இருவருமே இந்தப் பிரேரணைகளுக்கு முகங்கொடுக்கவுள்ளனர்.

மே மாதம் 5 ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரச திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் நிதி, போலியான வெளிநாட்டு வங்கிக் கணக்கொன்றுக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படும் பாரிய நிதி முறைகேடு தொடர்பாக, நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு எதிராக இந்தப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில், கிழக்கு கட்டளைப் பிரிவின் தளபதியாகக் கடமையாற்றிய இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர, அத்தாக்குதல்களைத் தடுப்பதற்கு எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.

இந்த இரு விவகாரங்களையும் மையப்படுத்திய நம்பிக்கையில்லாப் பிரேரணைகளில் அடுத்த வாரம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிடத் திட்டமிட்டுள்ளனர்.

அரசின் முக்கிய பதவிகளை இலக்கு வைத்து எதிர்க்கட்சிகள் முன்னெடுத்துள்ள இந்த நகர்வு, தேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் “நீதிக்கான நீள் பயணம்” கவனயீர்ப்புப் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள் பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்…

11 0 0
இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

77 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0