உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகர் பிரிவில் நடைபெற்ற சித்திரை புத்தாண்டு விழா.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
24 பார்வைகள்

மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகர் பிரிவில் சித்திரை புத்தாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வு மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகர் எம்.எச்.ஈர்ஷாட் அவர்களின் தலைமையில் இன்று (26) காலை 9.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட சுகாதார அத்தியட்சகர் வைத்திய கலாநிதி அசேல பெரேரா விஷேட அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் நுவரெலியா மாவட்ட சுகாதார அத்தியட்சகர் பிரிவில் இருந்து விசேட வைத்திய நிபுணர் ரந்தெனிய, வைத்திய கலாநிதி பிரபாஷர ஆகியோருடன் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் உள்ள வைத்திய அதிகாரி, சுகாதார அத்தியட்சகர் பிரிவில் உள்ள அனைத்து தாதியர்கள், மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார், உப தவிசாளர் பரமசிவம் ராஜ் அசோக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வில் சென் ஜோசப் தேசிய கல்லூரியின் மாணவிகள் மற்றும் சமனேலிய வித்தியாலய மாணவ மாணவியர்களின் வரவேற்பு நடனத்துடன் அதிதிகள் அழைத்து வரபட்டனர்.

சுப வேளையில் நிகழ்விற்கு வருகை தந்த அனைவரும் வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து சித்திரை புத்தாண்டு சமய நிகழ்வுகள் சுமனாராம விகாரையின் பௌத்த மதகுரு மற்றும் கிறிஸ்தவ மதகுரு, மஸ்கெலியா இஸ்லாமிய பள்ளிவாயில் மதகுரு, இந்து மதகுரு அவர்களின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பிக்கப்பட்டு விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றது.

சுமார் 6 கிலோமீற்றர் தூரம் மரதன் ஓட்டப்போட்டி இடம்பெற்றது. இதில் ஆண், பெண் இருபாலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஏனைய சகல போட்டிகளிலும் இடம்பெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

77 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0