உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

யாழில் பெண்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய அர்ச்சுனா.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
23 பார்வைகள்

யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் நேற்று (25) நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பெண்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:
சம்பவம் இடம்பெற்ற காணியின் உரிமை தொடர்பாக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. குறித்த காணி தனக்குச் சொந்தமானது என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோரி வரும் நிலையில், மற்றொரு தரப்பினரும் அதற்கு உரிமை கோரி வருகின்றனர்.

நேற்றையதினம் குறித்த காணியைச் சுத்தம் செய்யும் பணியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த இரு பெண்கள் காணியின் ஒரு பகுதி தமக்குரியது எனக் கூறி அவருடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, எதிரே நின்ற பெண்கள் எவ்வித ஆயுதங்களுமின்றி பேசிக்கொண்டிருந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் திடீரெனத் தனது கைத்துப்பாக்கியை எடுத்து அவர்களை மிரட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பெண்கள் மீதான இத்தகைய அச்சுறுத்தல் சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்குத் துப்பாக்கி வழங்கப்பட்டமையானது பொதுமக்களுக்கு ஆபத்தானது எனப் பல்வேறு தரப்பினரும் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தனர்.

எனினும், அந்தத் துப்பாக்கி இதுவரை மீளப் பெறப்படவில்லை.

இவ்வாறான நிலை தொடருமானால் பாரிய அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடும் எனப் பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0