உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

போதைப்பொருட்களுடன் சிக்கிய பிக்குகள்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
35 பார்வைகள்

கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 110 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நேற்று சனிக்கிழமை இரவு நடத்திய சோதனையின்போது இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

பாடசாலை பொருட்கள் மற்றும் பலவகையான இனிப்புகள் நிரப்பப்பட்ட போலி அடிப்பாகம் கொண்ட சூட்கேஸ்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 110 கிலோகிராமுக்கும் அதிகமான குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருள் இவர்களிடம் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒவ்வொரு பிக்குவும் தங்களது பயணப் பைகளில் ஐந்து கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருளை எடுத்துவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனுசரணையாளர் ஒருவர் ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் விமான டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி, இந்தக் குழுவினர் ஏப்ரல் 22 அன்று பாங்காக்கிற்குப் பயணம் செய்ததையும் புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர்.

சந்தேக நபர்கள் வெளிநாட்டில் இருந்தபோது சாதாரண உடையில் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கைபேசி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வரலாற்றில் இதுவே மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை என்றும், துறவிகள் பெருமளவு போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இது என்றும் விவரிக்கப்படுகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, பல்வேறு கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் இளம் துறவிகள் எனக் கூறப்படும் சந்தேக நபர்கள், மேலதிக நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0