உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஆசிரிய இடமாற்றத்தில் அடிப்படை உரிமை மீறல்; மூவருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
18 பார்வைகள்

ஏற்கனவே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட சேவையின் தேவை கருதிய இடமாற்ற விவகாரத்தில் அடிப்படை உரிமை மீறப்பட்ட விவகாரம் தொடர்பில் வட மாகாண உயர் அதிகாரிகள் மூவரை எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகத்தில் ஆயராகுமாறு அழைப்பு கட்டளை வழங்கப்பட்டுள்ளது.

வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர் மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆகியோருக்கு இவ்வாறு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது பெயரிடப்பட்ட எதிர்வாதி/எதிர்வாதிகளுக்கு எதிராக, இலங்கை அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமை/உரிமைகள் மீறப்பட்டதாகச் செய்யப்பட்டுள்ள புகார், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகத்தின் 7வது மாடியில் உள்ள அறை எண் 05-ல், 2026 ஏப்ரல் 28 ஆம் திகதி காலை 11.00 மணிக்கு விசாரிக்கப்படும்.

அதற்கமைய, தொடர்புடைய ஆவணங்களுடன் ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு உங்களுக்கு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

1996 ஆம் ஆண்டின் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டம் எண் 21 இன் பிரிவு 20(3) படி, ‘அழைப்பாணை வழங்கப்படும் ஒவ்வொருவரும் அதில் குறிப்பிடப்பட்ட நேரத்திலும் இடத்திலும் ஆணைக்குழுவின் முன் ஆஜராக வேண்டும்.

ஆணைக்குழுவால் அவரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் அல்லது அழைப்பாணையின் பொருளடக்கத்தின்படி, அவரிடமோ அவரின் கட்டுப்பாட்டிலோ உள்ளதாகவும், அவரிடமிருந்து கோரப்பட்டதாகவும் இருக்கும் ஆவணங்கள் அல்லது பிற பொருட்களை சமர்ப்பிக்க வேண்டும்.

1996 ஆம் ஆண்டின் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டம் எண் 21 இன் பிரிவு 18 கீழ் விசாரணைகள் நடத்துவதற்கான அதிகாரங்களைப் பயன்படுத்தும் சூழலில், பிரிவு 20(2) கீழ் அழைப்பாணை வழங்கப்பட்டபோது, பிரிவு 21(3) இன்படி, ஏற்றுக்கொள்ளத்தக்க காரணமின்றி ஆணைக்குழு குறிப்பிட்ட நேரத்திலும் இடத்திலும் ஆஜராகத் தவறுவது அல்லது மறுப்பது, ஆணைக்குழுவால் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்காதது, ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட அறிவிப்பு அல்லது எழுத்துப்பூர்வமான ஆணை அல்லது உத்தரவைப் பின்பற்றாதது அல்லது அவரிடமோ அவரின் கட்டுப்பாட்டிலோ உள்ளதாகவும் அவரிடமிருந்து கோரப்பட்டதாகவும் இருக்கும் ஆவணங்கள் அல்லது பிற பொருட்களை சமர்ப்பித்து காட்டாதது ஆகியவை, ஆணைக்குழுவின் அதிகாரத்துக்கு எதிரான அவமதிப்பு அல்லது மரியாதையின்மை குற்றமாகக் கருதப்படும்.

இத்தகைய அவமதிப்பு குற்றம், இலங்கை உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்துக்கு எதிரான அவமதிப்பு குற்றமாகவே கருதப்பட்டு, மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 21 படி தண்டிக்கப்படலாம் என தெரிவித்து அழைப்பு கட்டளை வழங்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0