உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

புதுக்குடியிருப்பு பிராந்தியத்தில் 11 விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – 3 கடைகளுக்கு சீல்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
22 பார்வைகள்

புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட வள்ளிபுனம், தேவிபுரம், உடையார்கட்டு மற்றும் கோம்பாவில் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய 11 விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, மொத்தமாக 2 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள், மேற்பார்வை சுகாதார பரிசோதகர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோர் இணைந்து மேற்கொண்ட திடீர் பரிசோதனையில், உணவகங்கள், வெதுப்பகங்கள், ஜூஸ் கடைகள் மற்றும் பலசரக்கு கடைகள் உள்ளிட்ட பல விற்பனை நிலையங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.

இதன்போது திகதி காலாவதியான பொருட்கள் விற்பனை செய்தல், மருத்துவச் சான்றிதழ் இன்றி பணியாற்றல், தனிப்பட்ட சுகாதாரக் குறைபாடுகள், குடிநீரின் தரத்தை உறுதிப்படுத்த தவறுதல், கழிவு நீரை சுற்றுச்சூழலுக்கு வெளியேற்றுதல், சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியின்றி விற்பனை நிலையம் நடத்தல், சுவர் மற்றும் தரையை அசுத்தமாக பராமரித்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் கண்டறியப்பட்டன.

இதனையடுத்து வள்ளிபுனம் பொது சுகாதார பரிசோதகர் றொஜிஸ்ரன் ஜோய், உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரதாஸ் மற்றும் கோம்பாவில் பொது சுகாதார பரிசோதகர் சுரேஸ் ஆனந்தன் ஆகியோரால் நேற்றையதினம் (24.04.2026) முல்லைத்தீவு மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், உரிமையாளர்களை குற்றவாளிகளாக அறிவித்து மொத்தமாக 235,000 ரூபா அபராதம் விதித்ததுடன், 5 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் வழங்கியது.

மேலும் பால் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட ஒரு நிலையம் மற்றும் இரண்டு ஜூஸ் கடைகள் என மொத்தம் 3 விற்பனை நிலையங்களுக்கு பூட்டு மற்றும் சீல் வைக்கப்பட்டதுடன், கடுமையான எச்சரிக்கையும் வழங்கப்பட்டது.

பொது சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க தவறும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக எதிர்காலத்திலும் இதுபோன்ற திடீர் சோதனைகள் தொடரும் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0