உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தீபச்செல்வன் உள்ளிட்ட எழுத்தாளர்களின் நூல்களை விடுவிக்கக் கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
26 பார்வைகள்

சுங்கத்திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கவிஞர் தீபச்செல்வன் உள்ளிட்ட எழுத்தாளர்களின் நூலை விடுவிக்க வலியுறுத்தி நாளையதினம் ஞாயிற்றுக்கிழமை 26 ஆம் திகதி கிளி நொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளதால் அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஈழத்திலும் சரி புலம்பெயர் தேசங்களிலும் நன்கு அறியப்பட்ட ஒரு எழுத்தாளராக விளங்கும் தீபச்செல்வன் அவரின் நூலினை பாதுகாப்பு அமைச்சும் சுங்கத்திணைக்களமும் சேர்ந்து தடுத்து வைத்திருக்கின்றன.


சிங்கள எழுத்தாளர்கள் மத்தியில் கூட இவரின் ஆக்கங்கள் வாசிக்கப்பட்டு மொழிபெயர்ப்பு கூட செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு எழுத்தாளரின் நூலானது தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அதற்கு எதிராக சிங்கள எழுத்தாளர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.


கடந்த வாரம் கலாசார அலுவல்கள் அமைச்சில் விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றிருந்த நிலையில் அதில் விடுவிப்பது தொடர்பாக ஒரு தீர்வும் எட்டப்படவில்லை.

எனவே குறித்த நூலை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்திற்கு அனைவரையும் ஆதரவு வழங்குமாறு எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0