உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மன்னார் பேசாலை பொலிஸ் நிலைய வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகத்தரின் முகம் சுழிக்க வைக்கும் செயல்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
30 பார்வைகள்

மன்னார் பேசாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை இடை மறித்து அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் பரவியுள்ளது.

பேசாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு வீதி போக்குவரத்து பிரிவு போலீசார் நேற்று வெள்ளிக்கிழமை இரவு பேசாலை பொலிஸ் நிலைய பிரதான வீதியில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது மோட்டார் சைக்கிலில் வந்த ஒருவரை இடைமறித்து மோட்டார் சைக்கிளுக்கான ஆவணங்கள் மற்றும் சாரதி  அனுமதிப்பத்திரம் போன்றவற்றை கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் அனைத்து ஆவணங்களையும் கொடுத்த போதும், குறித்த கடமையில் ஈடு பட்ட வீதி போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆவணங்களை பரிசீலித்த பின்னர் அவற்றை மீண்டும் வழங்காது தனது புத்தகத்தில் எழுத முயன்ற போது குறித்த நபர் தனது சுய பாதுகாப்பை கருத்தில் கொண்டு குறித்த வீதி போக்குவரத்து பொலிஸாரின் நடவடிக்கையை தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளார்.

இதன் போது குறித்த பொலிஸ் அதிகாரி குறித்த நபரை தாக்க முயற்சி செய்ததோடு,தகாத நடவடிக்கையில் குறித்த வீதி போக்குவரத்து பொலிஸார் ஈடுபட்டதாக குறித்த நபர் குற்றம் சுமத்தியதோடு,குறித்த இரு பொலஸாரின் நடவடிக்கைகளையும் வீடியோ எடுத்துள்ளார். பின்னர்,ஆவணங்களை பரிசோதித்த பின்னர் பதிவு செய்து மீண்டும் வழங்கிய நிலையில் குறித்த நபர் அங்கிருந்து சென்றார்.

இதேவேளை பேசாலை பொலிஸ் நிலைய வீதியில் இரவு நேரங்களில் கடமையில் ஈடுபடுகின்ற வீதி போக்குவரத்து பொலிஸார் அவ்வீதியால் செல்பவர்களை மறித்து பணம் அல்லது மதுபான போத்தல் கேட்பதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த பொலிஸாரின் நடவடிக்கை குறித்து வன்னி பொலிஸ்மா அதிபர் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0