உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
28 பார்வைகள்

பதுளை மாவட்டத்தின் பசறை பகுதியில் அமைந்துள்ள, பசறை தமிழ் தேசிய பாடசாலை, சமீபத்தில் ஏற்பட்ட டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பாடசாலையின் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்க மனிதாபிமான நேசக்கர சமூக சேவை அமைப்பு இன்று 25 ஆம் திகதி செயற்பட்டது.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் தலைமையிலான குழுவினர் பாடசாலைக்கு விஜயம் செய்து, புனரமைப்பு நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டனர்.

சுமார் 13 இலட்சம் ரூபாய் பெறுமதியான திட்டமாக இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. புயலால் சேதமடைந்த பாடசாலை மண்டபங்கள் மற்றும் கட்டிடங்களை சீரமைக்கும் பணிகளில் குழுவினர் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.

மேலும், இந்த மனிதாபிமான முயற்சியின் ஒரு பகுதியாக எதிர்வரும் திங்கட்கிழமை சுமார் 200 மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த சேவைக்காக பாடசாலை அதிபர் கே. எம். சி. பிரபாகரன், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0