உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மீண்டும் தலையெடுக்கும் மலேரியா ; வடமாகாணத்தில் ஒருவர் மரணம்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
32 பார்வைகள்

கடந்த ஆண்டில் வடக்கு மாகாணத்தில் 5 பேர் மலேரியா தொற்றுக்கு உள்ளாகி இருந்ததுடன் ஒருவர் மரணடைந்துள்ளார். இவ்வாண்டும் இது வரை ஒருவர் தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளார் என மலேரியா தடை இயக்கத்தின் வவுனியா பிராந்திய வைத்திய அதிகாரி வைத்தியர் கே. நிசாந்தினி தெரிவித்தார்.

வவுனியா மலேரியா தடை இயக்கத்தின் பிராந்திய அலுவலகத்தில் இன்று ஏப்ரல் 25 ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலக மலேரியா தினம் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை 25 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. மலேரியா உலக அளவில் இன்றும் முக்கிய பொது சுகாதார பிரச்சனையாகவுள்ளது. 2024 ஆம் ஆண்டு உலக அளவில் 282 மில்லியன் நோய் தாக்கங்களும், 6 இலட்சம் மரணங்களும் பதிவாகியுள்ளன.

இதில் 95 வீதமான மரணங்கள் ஆபிரிக்க பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ளது. ஆபிரிக்கா, தென்னாசியா, தென் அமெரிக்கா பகுதிகளில் இன்னும் மலேரியா தொற்று காணப்படுகிறது.

இலங்கையிலும் முன்னர் மலேரியா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. 1934, 1935 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் ஒரு இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். அவற்றில் மரணங்களும் ஏற்பட்டன. தடுக்கும் நோக்கில் மலேரியா ஒழிப்பு திட்டம் 1955 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இதன் விளைவாக 1962 ஆம் ஆண்டு மிகக் குறைந்த நோய் தாக்கமே இனங்காணப்பட்டது. இருந்த போதிலும் தொடர்ச்சியான கண்காணிப்பு, கவனக் குறைவு காரணமாக மீண்டும் 1968 இல் நோய் பரம்பல் ஏற்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0