உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல்! சகோதரனை காப்பாற்ற முயன்ற காவல்துறை உத்தியோகத்தர் படுகொ*லை!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
23 பார்வைகள்

சித்திரை புத்தாண்டு விழா ஒன்றில் இடம்பெற்ற மோதலின் போது, தனது சகோதரனை காப்பாற்ற முயன்ற காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொ*லை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம், அம்பாந்தோட்டை – வலஸ்முல்ல காவல்துறை பிரிவுற்குட்பட்ட போவல பகுதியில் நேற்று (24. 04.2026) இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கொல்லப்பட்டவர், மாளிகாவத்தை காவல் நிலையத்தில் கடமையாற்றி வந்த, அம்பாந்தோட்டை – வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், புத்தாண்டு விழா நடைபெற்ற இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த தனது சகோதரனை ஒரு குழுவினர் தாக்குவதாகக் கிடைத்த தகவலையடுத்து, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி தனது காரில் அந்த இடத்திற்குச் சென்றுள்ளார்.

பின்னர், அங்கு தனது சகோதரனைக் காப்பாற்ற முயன்றபோது, எதிர்த்தரப்பைச் சேர்ந்த ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட கூர்மையான ஆயுதத் தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில், வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கும், அதன் பிறகு கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளார்.

அதனைதொடர்ந்து, கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக வலஸ்முல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், உயிரிழந்த அதிகாரியின் இறுதிக்கிரியைகள் நாளை (26.04.2026) காவல்துறை மரியாதையுடன் நடைபெறவுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0