உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வங்கி கணக்குகளுக்கு குறி வைக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
30 பார்வைகள்

வங்கி கணக்குகளைச் சூறையாடும் புதிய வகை டிஜிட்டல் மோசடி குறித்த தகவல்களை இலங்கை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

அடையாளம் தெரியாத இலக்கத்திலிருந்தோ அல்லது உங்கள் நண்பரின் பெயரிலோ வரும் சந்தேகத்திற்குரிய “.apk” (dot apk) எனும் அபாயகரமான கோப்பை நீங்கள் பதிவிறக்கம் செய்து திறந்தால், உங்கள் மொபைல் போனின் கட்டுப்பாடு ஹேக்கர்களின் (Hackers) கைக்குச் சென்றுவிடும்.

இதன் மூலம் உங்கள் SMS செய்திகள் மற்றும் OTP குறியீடுகள் போன்ற முக்கியமான தகவல்கள் ஹேக்கர்களுக்குத் தெரிவதால், வங்கி கணக்குகளில் உள்ள பணத்தைக் கூட அவர்கள் கொள்ளையடிக்க வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக, உங்களுக்கு வரும் செய்திகளைத் திறக்கும்போது அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இலங்கையில் உள்ள ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கு WhatsApp மற்றும் Telegram சமூக ஊடகங்கள் ஊடாக “.apk” (.apk) கோப்புகள் (Files) அனுப்பப்படுவதை பொலிஸார் அவதானித்துள்ளனர்.

apk கோப்பு என்பது ‘Android Package Kit’ ஆகும். இது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் செயலிகளை (Apps) நிறுவுவதற்கான ஒரு ‘Setup File’ ஆகும்.

சமூக ஊடகங்கள் ஊடாக உங்களுக்கு வரும் திருமண அழைப்பிதழ், மின்சாரக் கட்டணம் அல்லது அதிர்ஷ்டலாபச் சீட்டு போன்ற பெயர்களில் அனுப்பப்படும் இந்த apk கோப்புகளை, ஒரு படம் அல்லது PDF எனக் கருதி கிளிக் செய்தவுடன், அது உங்கள் ஸ்மார்ட்போனில் ஒரு செயலியாக (App) தானாகவே நிறுவப்படும் (Install).

இதன் பின்னர், ஹேக்கர்களுக்கு உங்கள் மொபைல் போனில் உள்ளவற்றைக் கட்டுப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது.

அதன் மூலம் உங்களுக்கு வரும் SMS செய்திகளை அவர்களால் வாசிக்க முடியும் என்பதுடன், உங்கள் வங்கி கணக்குகள் தொடர்பான இரகசிய OTP குறியீடுகளும் நீங்கள் அறியாமலேயே ஹேக்கர்களின் கைக்குச் சென்றுவிடும்.

இதன் காரணமாக, அடையாளம் தெரியாத இலக்கத்திலிருந்தோ அல்லது நண்பரின் பெயரிலிருந்தோ வரும் இவ்வாறான சந்தேகத்திற்குரிய “.apk” கோப்புகளை ஒருபோதும் பதிவிறக்கம் செய்யவோ அல்லது திறக்கவோ வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

உங்கள் மொபைல் போனுக்குத் தேவையான செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும் போது எப்போதும் Google Play Store அல்லது Apple App Store ஆகியவற்றைப் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அத்துடன், மொபைல் போன் செட்டிங்ஸில் (Settings) உள்ள “Install Unknown Apps” என்ற தெரிவை முடக்கி (Disable) வைப்பதும் அவசியமாகும்.

ஒருவேளை நீங்கள் இவ்வாறான மோசடியில் சிக்கினால், உடனடியாக உங்கள் வங்கி கணக்குகளை முடக்கிவிட்டு அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கோ அறிவிக்குமாறு இலங்கை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0