உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நவீனமயமாகும் மோட்டார் வாகன காப்பீட்டுச் சேவை; அறிமுகமாகும் புதிய அம்சம்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
32 பார்வைகள்

இலங்கையில் மோட்டார் வாகன காப்பீட்டுச் சேவைகளை நவீனமயமாக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, புதிய டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

குறித்த திட்டம், எதிர்வரும் மே மாதம் 1 ஆம் திகதி முதல் அறிமுகமாகவுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டம் வாகன உரிமையாளர்களுக்கு இலகுவான மற்றும் வினைத்திறனான காப்பீட்டுச் சேவைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த முன்னெடுப்பு தேசிய டிஜிட்டல் மயமாக்கலில் ஒரு படி முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்றும், இது பொதுப் பாதுகாப்பை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பௌதீக பிளாஸ்டிக் அட்டைகளுக்குப் பதிலாக புதிய அட்டைகளைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கும் ஆதரவளிக்கும் என அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இலங்கை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணைக்குழு, இலங்கை காப்பீட்டு சங்கம் மற்றும் இலங்கை காவல்துறை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை வெளியிடப்படுவதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0