உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

30 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க திட்டம்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
34 பார்வைகள்

யுத்தம் காரணமாக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இயங்காத நிலையிலுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை மீள இயக்குவதற்கான யோசனையினை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்வைத்துள்ளது.

அதற்கமைய, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகிய அமைச்சர் குழுவினர் கடந்த 07.03.2025 அன்று சீமெந்து தொழிற்சாலையை பார்வையிட்டனர்.

அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் ஏப்ரல் 25 ஆம் திகதி தொழில் மற்றும் நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த குறித்த சீமெந்து தொழிற்சாலையினை பார்வையிட்டார்.

இதன்போது சீமெந்து தொழிற்சாலையை கைத்தொழில் மையமாக மாற்றி மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டார்.

இதேவேளை சீமெந்து தொழிற்சாலையை கைத்தொழில் வலயமாக மாற்றுவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீபவானந்தராஜா தனது கருத்தினை தெரிவித்தார்.

மேலும் இந்த விஜயத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ஸ்ரீபவானந்தராஜா உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0