உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பறவைகள் சரணாலயத்தைச் சூழ குப்பை வீசினால் கடும் நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
36 பார்வைகள்

மட்டக்களப்பு – மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட குருக்கள்மடம் ஏத்தாலைக்குள பறவைகள் சரணாலயத்தைச் சூழ்ந்த பிரதான வீதியில் குப்பைகள் கொட்டும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஈரநில அதி உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த சரணாலயப் பகுதி சுற்றிலும் சிலர் வாகனங்களில் வந்து குப்பைகளை மூட்டைகளாக கொட்டுவதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அந்தஅந்த வழியாகப் பயணிப்பதும் சிரமமாகியுள்ளது.

இச்சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்கள் பலமுறை முறையிட்டுள்ளதுடன், குப்பை வீசுவோரைக் கையும் களவுமாகப் பிடித்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்க பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், குறித்த பகுதியில் CCTV கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளார்.மேலும், தொடர்ச்சியாக குப்பைகள் கொட்டும் நபர்களுக்கு பொதுச் சுகாதார பரிசோதகர் மூலமாக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0