சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம்.!
இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலையில் இன்று (25.04.2026) எவ்வித மாற்றமும் பதிவாகவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.அதன்படி தற்போதைய விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.394,000 ஆகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.362,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கமைய, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.49,250 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.45,312 ஆகவும் நிலவுகிறது.
சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலையில் சிறிய வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், மத்திய கிழக்கு போர் ஆரம்ப காலத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,000 அமெரிக்க டொலரை கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஏற்பட்ட மாற்றங்களால் விலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுள்ளன.
தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் சுமார் 4,708 அமெரிக்க டொலராகவும், ஒரு அவுன்ஸ் வெள்ளி 75.69 அமெரிக்க டொலராகவும் விற்பனை செய்யப்படுவதாக சர்வதேச சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில் உள்நாட்டிலும் தங்க விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு குறைவாக இருப்பதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.