உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

குடும்பஸ்தரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
35 பார்வைகள்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை (24) தனது வீட்டிற்கு அருகிலுள்ள மற்றுமொரு வீட்டின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் 34 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்குச் சென்ற சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன், மரண விசாரணைகள் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில் இடம்பெற்றன.

விசாரணையின் பின்னர், தூக்கினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் ஏற்பட்டதாகத் தீர்மானிக்கப்பட்டு, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இவ்வாறு உயிரிழந்தவர், வீரமுனை 3 பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் கிருஷ்ணராஜ் (34) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இரண்டு வயது குழந்தையின் தந்தையான இவர் மதுப் பழக்கத்திற்கு உட்பட்டவராக இருந்ததுடன், குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை முயற்சியில்ஈடுபட்டிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

76 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

83 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0