உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
30 பார்வைகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.25,550,000 ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருள் தொகுதியுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.விமான நிலைய சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் இன்று அதிகாலை 1.25 மணியளவில் தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து, தாய் ஏர் ஆசியா விமான சேவைக்கு சொந்தமான FD-140 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.சந்தேக நபரின் பயணப்பொதிக்குள் இருந்த காய்ந்த பழங்கள் அடங்கிய பக்கெட்டுகளில், பழங்களை அகற்றிவிட்டு 2 கிலோகிராம் 505 கிராம் நிறையுடைய குஷ் போதைப்பொருளை சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த நிலையில், சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொழும்பு பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய புகைப்படக் கலைஞர் என தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

75 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

82 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0