உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தேர்தல் மற்றும் ஜனநாயகத்துக்கான செயலூக்கப்படுத்தப்பட்ட பிரஜைகள்; ஊடகவியலாளர் மகாநாடு!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
29 பார்வைகள்

தேர்தல் மற்றும் ஜனநாயகத்துக்கான செயலூக்கப்படுத்தப்பட்ட பிரஜைகள் என்ற செயல்திட்டத்தின் தொடர்பாடலுக்கான பயிற்சி மையம் ( CCT) ஏற்பாடு செய்யப்பட்ட நுவரெலிய மாவட்ட இணைப்பாளர் டி ரஜினிகாந்த் தலைமையில் இன்றைய தினம் ஹட்டன் லா அடம்ஸ் விருந்தக மண்டபத்தில் ஊடகவியலாளர் மகாநாடு இடம்பெற்றது.

இதில் அண்மையில் அனர்த்தத்தை ஏற்படுத்திய டிட்வா அனர்த்தத்தின் பின் பெருந்தோட்ட பகுதி மக்களுக்கான சேவைகள் தொடர்பான பாரபட்சம் மற்றும் வளப்பகிர்வில் உள்ள பாதிப்புக்கள் தொடர்பாகவும் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் தொடர்பாகவும் மேலும் மலையக மக்களின் வீட்டு உரிமை, காணி உரிமை, தொடர்பாகவும் பெருந்தோட்டத்துறையில் லயன் அறைக்ளுக்கு பதிலாக பாமடி வீட்டுத்திட்டம் பொறுத்தமற்றது என்றும்.

மலையக பெருந்தோட்ட பெண்கள் எதிர்நோக்கும் சவால்களும் கலந்துரையாடப்பட்டது.

இந் நிகழ்வில் முன்னாள் திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் பேராசிரியர் மதிப்புக்குரிய திருவாளர் சந்திரபோஸ் அவர்களும் மனித உரிமைகள் நிலையத்தின் அட்டன் பிராந்திய முகாமையாளரும் சமூக சிற்பி நிறுவனத்தின் உடைய தலைவருமான திருவாளர் ஜெயராஜ் அவர்களும்.

SWM நிறுவனத்தின் தலைவர் திருமதி சந்திரமதி அவர்களும். சுய சக்தி நிறுவன இணைப்பாளர் திருவாளர் செல்வராஜ் அவர்களும் அரசியல் செயல்பாட்டாளர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் திருவாளர் சுரேஷ் குமார் அவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள இளைஞர்கள் யுவதிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

75 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

82 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

32 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

54 0 0