உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சீன சிகரெட்டுகளுடன் சிக்கிய இருவர்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
30 பார்வைகள்

சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக வெளியே எடுத்துச் செல்ல முற்பட்ட இரண்டு வெளிநாட்டுப் பயணிகள் இன்று (24) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 35 மற்றும் 53 வயதுடைய பங்களாதேஷைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகையின் பெறுமதி சுமார் 42 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுங்கப் பிரிவினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் படி,
சீன நாட்டவர் ஒருவரால் சீனாவில் கொள்வனவு செய்யப்பட்ட இந்த சிகரெட்டுகள், கம்போடியா ஊடாக மலேசியாவின் கோலாலம்பூருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

தொடர்ந்து மலேசிய எயார்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வந்து பின்னர், இவற்றை விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்வதற்காக குறித்த பங்களாதேஷ் பிரஜைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் கொண்டு வந்த 5 பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனத் தயாரிப்பான 28,400 சிகரெட்டுகளை உள்ளடக்கிய 412 சிகரெட் பொதிகள் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் சந்தேக நபர்களைத் தடுப்புக்காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

74 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

53 0 0