உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
34 பார்வைகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (24) கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, ஆஜரான அரச சட்டத்தரணி, இந்த குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய மற்றுமொரு வழக்கு 08 ஆம் இலக்க மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

அந்த வழக்கில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால், இந்த வழக்குக்கும் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பான முன்னேற்றங்களை அறிவிப்பதற்கு கால அவகாசம் கோரிய அரச சட்டத்தரணியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், எதிர்வரும் ஜூன் 10ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

கடந்த 2009ஆம் ஆண்டு மார்ச் 31 முதல் 2013 டிசம்பர் 12ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், வருமானம் ஈட்டிய முறையை வெளிப்படுத்த முடியாத 59 மில்லியன் ரூபாவிற்கும் அதிகப்படியான பணத்தை, மூன்று தனியார் வங்கிகளின் நிலையான வைப்பு கணக்குகளில் வைப்பிலிட்டதன் மூலம் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாக இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் சட்டமா அதிபரினால் மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

74 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

53 0 0