உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பிள்ளையானுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள்; சரத் பொன்சேகாவை சிக்கவைக்க உதய கம்மன்பில தீட்டிய திட்டம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
32 பார்வைகள்

ஆயுத கையளிப்பில் ஜெனரல் சரத் பொன்சேகாவை தொடர்புபடுத்துமாறு உதய கம்மன்பில பிள்ளையானுக்கு ஆலோசனை வழங்கிய தகவல் அம்பலமாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு பாதுகாப்பு அமைச்சினால் 400-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் வழங்கப்பட்டமை அன்றைய இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவின் உத்தரவின் பேரில் இடம்பெற்றதாகக் கூறுமாறு உதய கம்மன்பில பிள்ளையானுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பிள்ளையான் கல்கிசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது கட்சிக்காரருக்கு திட்டமிட்ட முறையில் பொய்ப் பிரசாரங்களை செய்யுமாறு அறிவுறுத்தியமைக்காக கம்மன்பிலவுக்கு எதிராக பல தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

இது சட்டத்தரணிகள் ஒழுக்கக்கோவையை மீறும் செயல் எனவும் இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்ய முடியும் எனவும் சட்டவல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த காலப்பகுதியிலேயே இந்த ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் பிள்ளையான் சித்திரவதை முகாம் ஒன்றையும் நடத்தி வந்தமையும் தெரியவந்துள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் அவரை ஒரு ஆண்டுக்கு மேல் கைது செய்து விசாரணை செய்து வருகிறது.

கடந்த (02.04.2026) அன்று அவர் கல்கிஸ்ஸ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து சட்ட ஆலோசனை கிடைக்கும் வரை பிள்ளையானை விளக்கமறியலில் வைக்க கல்கிசை பிரதம நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டிருந்தார்.

சந்தேக நபரின் சார்பில் முன்னாள் அமைச்சரும் சட்டத்தரணியான உதய கம்மன்பில பிள்ளையான் சார்பில் நீதிமன்றில் முன்னிலையானார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

74 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

53 0 0