நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; இருவர் உயிரிழப்பு.!
நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று (23) வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை – மட்டக்களப்பு வீதியின் ஹொப்டன் பகுதியில் நேற்று மாலை முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் லுணுகலை பகுதியைச் சேர்ந்த 67 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பசறை நோக்கி பயணித்த குறித்த முச்சக்கரவண்டி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த சாரதி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – கண்டி பிரதான வீதியின் அம்பன்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஹந்தெஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறியொன்று, எதிரே வந்த வேனுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் வேனின் பின் இருக்கையில் பயணித்த ஒரு பெண்ணும் ஒரு ஆணும் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்துக்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.