உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிமனை உத்தியோகத்தர்களுக்கு தொற்றா நோய் பரிசோதனை!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
30 பார்வைகள்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் ஆரோக்கியத்தைப் பேணும் நோக்கில், அவர்களுக்குரிய தொற்றா நோய் (NCD) கண்டறியும் மருத்துவ பரிசோதனைகள் பணிமனையில் இடம்பெற்றது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனையின் கீழ், பிராந்திய தொற்றாநோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம்.பௌசாத் அவர்களின் வழிகாட்டலில் குறித்த மருத்துவ பரிசோதனைகள் இடம்பெற்றது.

தற்கால வாழ்க்கை முறையில் அதிகரித்துவரும் தொற்றா நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதற்கான ஆலோசனைகளை வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகும். இதன் போது ஊழியர்களுக்கு பின்வரும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

  • இரத்தப் பரிசோதனை: நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளைக் கண்டறிதல்.
  • உடல் நிறை சுட்டி (BMI): உயரத்திற்கேற்ற உடல் எடையை உறுதிப்படுத்துதல்.
  • இரத்த அழுத்தம் (Blood Pressure): உயர் இரத்த அழுத்த நிலைமைகளை அவதானித்தல்.
  • கண் மற்றும் வாய் சுகாதாரப் பரிசோதனைகள்.

இந்த விசேட மருத்துவ பரிசோதனையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை மற்றும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைகளின் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டு தங்களது மேலான சேவைகளை வழங்கினர்.

சுகாதாரத்துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஊழியர்கள், தமது பணியின் நிமித்தம் சொந்த ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ள முடியாமல் போகும் சந்தர்ப்பங்கள் அதிகமாகும். அதனைத் தவிர்த்து, ஆரோக்கியமான ஒரு பணிச் சூழலை உருவாக்கும் நோக்கில் இப்பரிசோதனை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

68 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

52 0 0