உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நிலக்கரி இறக்குமதி விவகாரம் குறித்த ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
37 பார்வைகள்

கடந்த 2009ஆம் ஆண்டு தொடக்கம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரிக்கான விலைமனு கோரலின்போது இடம்பெற்ற ஊழில் மோசடிகளை ஆராய்வதற்காக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, தமது விசாரணைகளை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழு அலுவலகம் கொழும்பில் உள்ள புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஆதித்யபத்தபெண்டி மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ சோமரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் நிலக்கரி மூலம் மின்சார உற்பத்தி செயல்முறை தொடங்கியதிலிருந்து 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தொடர்பாக ஆராயப்படவுள்ளது.

தனியார் நிறுவனம் அல்லது அதனை சார்ந்த நிறுவனங்களால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட் ட நிலக்கரி மற்றும் மின்சார உற்பத்தியில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது சட்டவிரோத செயல்கள் உள்ளிட்ட மேலும் பல விடயங்களை ஜனாதிபதி ஆணைக்குழு ஆராயவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

68 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

52 0 0