உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பஞ்ச புராணம் ஓதுதல் போட்டிக்கான சான்றிதழ் வழங்கும் விழா.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
38 பார்வைகள்

நாவலப்பிட்டி கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையில் இந்தியா கந்தர்வக்கோட்டை கயிலை அறக்கட்டளை மூலம் பஞ்ச புராணம் ஓதுதல் போட்டிக்கான சான்றிதழ் வழங்கும் விழா இடம்பெற்றது.

பாடசாலையில் மாணவர்களின் ஆன்மீக அறிவையும், தமிழ் பண்பாட்டு விழுமியங்களையும் வளர்க்கும் நோக்கில் ‘பஞ்ச புராணம் ஓதுதல் போட்டி’ இன்று (புதன்கிழமை) மிகச்சிறப்பாக நடைபெற்றது.

​கந்தர்வக்கோட்டை கயிலை அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு, பாடசாலைத் தலைமையாசிரியர் பெ. லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

​பாடசாலை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு, பஞ்ச புராணப் பாடல்களை முறையாகவும் பக்தியுடனும் ஓதித் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

போட்டியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு கயிலை அறக்கட்டளையின் சார்பில் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கயிலை அறக்கட்டளை நிறுவனர் இரா. துரைசாமி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவ. வி. பொன்னம்மாள் ஆகியோரின் வழிகாட்டலில் இந்தச் சான்றிதழ்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு, மாணவர்களின் திறமைகளைப் பாராட்டியதுடன் இதுபோன்ற போட்டிகள் எதிர்கால சந்ததியினருக்குத் தமிழ் மரபைக் கொண்டு சேர்க்கும் என வாழ்த்தினர்.

​இப்போட்டியானது மாணவர்களிடையே ஆன்மீகப் பற்றுடன் கூடிய ஒழுக்க விழுமியங்களை விதைக்கும் ஒரு முக்கிய தளமாக அமைந்ததாகப் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

67 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

80 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

52 0 0